கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவல் கண்டுபிடிப்பு: தீவிர தடுப்பு நடவடிக்கையில் கேரள அரசு
By : King24x7 Rafi
Update: 2024-05-08 06:50 GMT
கேரளாவில் மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் மாவட்டங்களில் வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனையை நாட கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்ட நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு சீசனுக்கும் வெவ்வேறு விதமான நோய்கள் பரவுவதும், அதனை தேசிய மற்றும் மாநில சுகாதாரத்துறை கட்டுப்படுத்துவதும் வழக்கமாக நடக்கும் ஒன்று தான். அந்த வகையில் தற்போது கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதாக மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அம்மாநிலத்தில் திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.