இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு..!!

Update: 2024-05-02 06:32 GMT

Mbbs

டெல்லி: இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, வரும் மே 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 557 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 14 நகரங்களிலும் நீட் தேர்வு நடைபெறுகிறது. மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை நாடு முழுவதும் 24 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர்.ஹால் டிக்கெட்டை தேர்வர்கள் https://exams.nta.ac.in/NEET என்ற இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் பதிவிறக்க இயலாவிடில் neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் புகார் தெரிவிக்கலாம். ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் 011-40759000 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News