ஆந்திரா தேர்தல் முடிவுகளை கண்டு ஒட்டு மொத்த இந்தியாவே ஆச்சரியப்படும்: முதல்வர் ஜெகன் மோகன் பேச்சு
By : King24x7 Rafi
Update: 2024-05-17 05:31 GMT
ஆந்திராவில் 151 எம்எல்ஏ, 22 எம்பி இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என விஜயவாடாவில் ஐபேக் பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் பேசினார்.ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு ஐபேக் நிறுவனத்தினர் தேர்தல் வியூகம் வகுத்து செயல்படுத்தி வந்தனர். இந்நிலையில் மே 13ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் தனது கட்சி வெற்றிக்காக பணிபுரிந்த ஐ பேக் பிரதிநிதிகளுடன் விஜயவாடாவில் உள்ள அவர்களது அலுவலகத்திற்கு முதல்வர் ஜெகன் மோகன் நேற்று நேரடியாக சென்றார். அப்போது, தேர்தல் வியூகம் வகுத்து செயல்படுத்தி வந்த அனைத்து பிரதிநிதிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.