தடையை மீறி போராட்டம் பாஜ அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற கெஜ்ரிவாலை தடுத்து நிறுத்திய போலீஸ்: கட்சி தொண்டர்கள் பலர் கைது, டெல்லியில் பரபரப்பு
By : King24x7 Rafi
Update: 2024-05-20 06:19 GMT
டெல்லியில் 144 தடை உத்தரவை மீறி, பாஜ தலைமையகத்தை முற்றுகையிட கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக சென்றதால் பரபரப்பு நிலவியது. அவர்களை நடுவழியில் தடுத்த போலீசார் தொண்டர்கள் பலரையும் கைது செய்தனர். டெல்லியில் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர்.