ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல பதிவு செய்த அனைவரும் இ-பாஸ் பெற்றுள்ளனர்: தமிழ்நாடு அரசின் எளிமையான நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டு
By : King24x7 Rafi
Update: 2024-05-10 05:34 GMT
நீலகிரி மாவட்டத்திற்கு இதுவரை 3,65,461 சுற்றுலா பயணிகள் 68,878 வாகனங்களிலும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு 2,74,211 சுற்றுலா பயணிகள் 42,661 வாகனங்களிலும் பயணிக்க இ-பாஸ் பெற்றுள்ளனர். பதிவு செய்த அனைவரும் இ-பாஸ் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அரசின் எளிமையான நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை புரிவதால், இந்த ஆண்டு இச்சுற்றுலா தலங்களுக்கு வருகைதர இ-பாஸ் அவசியம் என மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, 07.05.2024 அன்று முதல் 30.06.2024 வரை இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டது.