தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு :கொளுத்தும் வெயிலுக்கு நடுவே வானிலை மையம் “ஜில்” அறிவிப்பு!!

Update: 2024-05-14 06:20 GMT

Rain

தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மழை பொழிவைத் தரும் காலங்கள் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலம்தான். இதில், தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். தென்மேற்குப் பருவ மழையால் இந்தியாவில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் பயன் பெறுகின்றன. தென் மேற்கு பருவமழை இயல்பாகவே மே 22ம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதியில் தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே வரும் 19ம் தேதி தொடங்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News