நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; பிரதமருக்கு முதல்வர் கடிதம்!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.;

Update: 2026-01-25 05:57 GMT

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதத்தில்; வரவிருக்கும் கல்வியாண்டு முதல் இளங்கலை பிசியோதெரபி மற்றும் இளங்கலை ஆக்குபேஷனல் தெரபி ஆகிய இரண்டு பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வில் பங்கேற்பதை தேசிய துணை மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் ஆணையம் கட்டாயமாக்கியுள்ளது. இந்த அவசரமான மற்றும் தன்னிச்சையான முடிவினால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அதனை உடனடியாகத் திரும்பப்பெறப்பட வேண்டும்எதிர்காலத்தில் அனைத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வைக் கட்டாயமாக்கும் ஒரு பெரிய திட்டத்தின் முதல்படியாக, இரண்டு படிப்புகளுக்கு நீட் தேர்வு பரிந்துரைக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தகவல்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. சுகாதாரம் மற்றும் கல்வி ஆகிய இரு துறைகளுக்கும் பொறுப்பான மாநில அரசுகளுடன் முறையான கலந்தாலோசனைகளை செய்யாமல் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி மாநில அரசால் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.ஒரு நுழைவுத் தேர்வில் பங்கேற்றிருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்துவது சரியானதல்ல. இது நீட் தேர்வை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டதாகத் தெரிகிறது. துணை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை நடைமுறைகள் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள்ளேயே நீடிக்க வேண்டும். இந்தச் சேர்க்கைக்கு நீட் தேர்வினை விலக்கி வைக்கப்படவேண்டும். எனவே, இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யவேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News