பஜாஜ் நிறுவனம் தயாரிக்கும் 2-வீலர்கள்- இந்திய விற்பனை அளவை விட வெளிநாட்டு விற்பனை தான் அதிகம் !!

பஜாஜ் நிறுவனம் தயாரிக்கும் 2-வீலர்கள்-  இந்திய விற்பனை அளவை விட வெளிநாட்டு விற்பனை தான் அதிகம் !!

பஜாஜ் நிறுவனம்

பஜாஜ் வாகனங்களின் விற்பனை எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது அல்லது குறைந்துள்ளது என்பதை பற்றி பார்க்கலாம். பல காலமாக ஆட்டோமொபைல்வணிகத்தில் ஈடுபட்டு வரும் இந்திய நிறுவனம் பஜாஜ் ஆட்டோ ஆகும்.

ஆரம்பத்தில் சேத்தக் உள்ளிட்ட ஸ்கூட்டர்கள் மூலமாக மக்கள் மத்தியில் கவனத்தைப் பெற்ற பஜாஜ் அதன் பின் அறிமுகப்படுத்திய பல்சர் பைக் பஜாஜ் நிறுவனத்தை தாண்டி இந்தியா முழுவதும் பிரபலமாகியது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தைப் பற்றி தெரியாதவர்கள் கூட பல்சர் பைக்குகளை பற்றி அறிந்து வைத்துள்ளனர். இதனால் பல்சர் பைக் பல்வேறு விதமாக சிசி என்ஜின்களில் பஜாஜ் விற்பனை செய்கிறது. சமீபத்தில் 400 சிசி பல்சர் பைக் கூட அறிமுகம் செய்யப்பட்டது.

இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் பஜாஜ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் ஆட்டோக்கள் போன்ற கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியிலும் பஜாஜ் ஆட்டோ ஈடுபட்டு வருகிறது.

பூனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 88 ஆயிரத்து 256 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், 2023 ஏப்ரல் மாதத்தில் வெறும் 3 லட்சத்து 31,278 வாகனங்களை மட்டுமே பஜாஜ் விற்பனை செய்திருந்தது. 3 லட்சத்து 88,256 வாகனங்களில் உள்நாட்டில், அதாவது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை 2 லட்சத்து 49,083 ஆகும். அதேநேரம், 1 லட்சத்து 39,173 வாகனங்களை கடந்த மாதத்தில் பஜாஜ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.

பஜாஜ் ஆட்டோவின் உள்நாட்டு விற்பனை, வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் கடந்த ஆண்டு ஏப்ரல் உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஏப்ரலில் கணிசமாக அதிகரித்துள்ளது. 2-வீலர்களை பொறுத்தவரையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 3 லட்சத்து 41,789 இருசக்கர வாகனங்களை பஜாஜ் விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 2 லட்சத்து 16,950 மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 1 லட்சத்து 24,839 ஆகும்.

2023 ஏப்ரலில் 1 லட்சத்து 81,828 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் விற்பனை செய்தும், 1 லட்சத்து 6,157 இருசக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு பஜாஜ் நிறுவனம் ஏற்றுமதி செய்தும் இருந்தது. இவ்வாறு, கடந்த ஆண்டு ஏப்ரலை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் ஏறக்குறைய 54 ஆயிரம் 2-வீலர்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதிகமாக விற்பனை செய்துள்ளது.

கமர்ஷியல் வாகனங்களை பொறுத்தவரையில், கடந்த 2024 ஏப்ரலில் 46,467 பஜாஜ் கமர்ஷியல் வாகனங்கள் ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை 31,133, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை 14,334 ஆகும். பஜாஜ் கமர்ஷியல் வாகனங்களின் உள்நாட்டு விற்பனையில் பெரிய எந்த மாற்றமும் இல்லை என்றாலும், வெளிநாட்டு வெளிநாட்டு, ஏற்றுமதி 20%ஏற்றுமதி 20% அதிகரித்துள்ளது.








Tags

Read MoreRead Less
Next Story