2024 மாருதி சுசுகி டிசையர் நவம்பர் 11ஆம் தேதி அறிமுகம் - அதன் சிறப்பம்சங்கள் !!

2024 மாருதி சுசுகி டிசையர் நவம்பர் 11ஆம் தேதி அறிமுகம் - அதன் சிறப்பம்சங்கள் !!

மாருதி சுசுகி டிசையர்

2024 மாருதி சுசுகி டிசையர் இந்திய சந்தையில் நுழைய தயாராக உள்ளது. இந்நிறுவனம் வரும் நவம்பர் 11ம் தேதி உள்நாட்டு சந்தையில் 2024 மாருதி சுசுகி டிசையரை அறிமுகம் செய்யவுள்ளது. மாருதி சுஸுகி டிசையர் தற்சமயம் இந்திய சந்தையில் ரூ.6.56 லட்சம் ஆரம்ப விலையில் வாங்கலாம், இது டாப் வேரியன்டிற்கு ரூ.9.38 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக இருக்கும்.

புதுப்பிக்கப்பட்ட எஞ்சின், புதிய அம்சங்கள் மற்றும் காஸ்மெட்டிக் மாற்றங்கள் மூலம் இதன் விலை சுமார் ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் 11ஆம் தேதி வெளியாகும்.

எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் ஃபாக் லைட்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.2024 மாருதி சுஸுகி டிசைரின் இன்டிரீயர் டிசைனானது, அதன் முந்தைய வெர்ஷனான ஸ்விஃப்ட்டைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கேபின் டூயல் டோன் பிளாக் மற்றும் பீஜ் தீம் பெறும், அதே சமயம் அதன் டாப் வேரியண்ட் லெதர் அப்ஹோல்ஸ்டரியுடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

9 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஹெட்-அப் டிஸ்ப்ளே, சன்ரூஃப் மற்றும் இது தவிர, ஏர்பேக்குகள், EBD மற்றும் ESC போன்ற பாதுகாப்பு அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்த புதிய டிசையர் மாடலானது மாருதி ஸ்விஃப்ட் போன்ற 1.2 லிட்டர், 3-சிலிண்டர் Z-சீரிஸ் பெட்ரோல் எஞ்சினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சினில் 80 பிஎச்பி பவரையும், 112 என்எம் பீக் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

Tags

Next Story