மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய அர்மாடோ

மஹிந்திரா நிறுவனம் உருவாக்கிய அர்மாடோ

அர்மாடோ 

இந்திய ராணுவத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம்- அர்மாடோ குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டது.

மஹிந்திரா நிறுவனம் இந்த வாகனத்தை இந்திய ராணுவத்திற்காக மிகவும் விசேஷமாக உருவாக்கி இருக்கிறது.

முழுக்க முழுக்க இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்ட மஹிந்திரா அர்மாடோ ராணுவ பயன்பாட்டுக்கு தேவையான அதிநவீன தொழில்நுட்பங்கள், அதிகளவு பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கிறது.

பலவிதங்களில் பயன்படுத்தக்கூடிய மிக முக்கிய வாகனங்களில் ஒன்றாக ஆயுதம் தாங்கிய இலகுரக வாகனம் விளங்குகிறது.

அந்த வகையில், மஹிந்திரா உருவாக்கும் அர்மாடோ மாடலில் பி7 மற்றும் ஸ்டனாக் லெவல் II பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.

அர்மாடோ மாடலில் 3.2 லிட்டர் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட டைரக்ட் இன்ஜெக்ஷன் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

வாகனத்தில் 1000 கிலோ எடை ஏற்றப்பட்ட நிலையிலும் அர்மாடோ மாடல் மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.

இவைதவிர அர்மாடோ மாடலில் ஆயுதங்களை பொருத்திக் கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

தோற்றத்தில் ஹம்மர் போன்ற டிசைன் கொண்டிருக்கும் அர்மாடோ அசாத்திய செயல்திறன், அதிநவீன தொழில்நுட்பத்துடன் ராணுவ பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

Tags

Next Story