ஆடி Q7 லிமிடெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் !!
ஆடி Q7
ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் Q7 போல்ட் எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக ஆடி இந்தியா நிறுவனம் ஆடி Q3 போல்ட் எடிஷன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்த நிலையில், தற்போது Q7 எஸ்.யு.வி.-இன் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆடி Q7 போல்ட் எடிஷன் விலை ரூ. 97 லட்சத்து 84 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
லிமிட்டெட் எடிஷன் ஆடி Q7 கார்- கிளேசியர் வைட், மித்தோஸ் பிளாக், நவெரா புளூ மற்றும் சாமுராய் கிரே என நான்குவிதமான நிறங்களில் கிடைக்கிறது. இந்த காரின் வெளிப்புறத்தில் பிளாக் ஸ்டைலிங் செய்யப்பட்டு கார் ஸ்போர்ட் தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் கிளாஸ் பிளாக் கிரில், பிளாக்டு அவுட் செய்யப்பட்ட ஆடி லோகோ, பிளாக்டு-அவுட் விண்டோ சரவுண்ட்கள், ORVMகள், ரூஃப் ரெயில்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிய Q7 போல்ட் எடிஷன் மாடலில் 3.0 லிட்டர் V6 எஞ்சின் மற்றும் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 335 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் மற்றும் AWD சிஸ்டம் வழங்கப்படுகிறது.
ஆடி Q7 போல்ட் எடிஷன் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 5.6 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.