பண்டிகையை முன்னிட்டு பல்சர் பைக் சலுகை அறிவித்த பஜாஜ் ஆட்டோ நிறுவனம் !

பண்டிகையை முன்னிட்டு பல்சர் பைக் சலுகை அறிவித்த பஜாஜ் ஆட்டோ   நிறுவனம் !

பஜாஜ் நிறுவனம்

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பண்டிகையை முன்னிட்டு தனது பிரபலமான பல்சர் பைக் ரேஞ்சில் தசரா சலுகையை தெரிவித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் தனது பிரபல பல்சர் பைக்குகளின் விற்பனையை அதிகரிக்க பண்டிகைகால சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.

பண்டிகை காலத்தில் குறைந்த விலையில் வாகனம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு உதவ கணிசமான வகையில் ரூ.10,000 தள்ளுபடியை பல்சர் மாடல்களுக்கு நிறுவனம் வழங்குகிறது.

இந்த பண்டிகை கால ஆஃபரை மேலும் இனிமையாக்கும் வகையில் பல்சர் 125 கார்பன் ஃபைபர், NS125, N150, பல்சர் 150, N160, NS160, NS200 மற்றும் N250 உள்ளிட்ட பல்வேறு மாடல்களை வாங்குவோர் ரூ.5,000 வரை கேஷ்பேக் சலுகைகளை பெறலாம் என்று பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அறிவித்துள்ளது.

Tags

Next Story