பஜாஜ் நிறுவனம் களமிறக்கும் புதிய பல்சர் ....அறிமுகமா ?

பஜாஜ் நிறுவனம் களமிறக்கும் புதிய பல்சர் ....அறிமுகமா ?

பல்சர்

இந்தியாவில் 300 சிசி முதல் 500 சிசி வரை திறன் கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு மிக சிறந்த உதாரணமாக ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை கூறலாம். இதேபோல், கேடிஎம் ட்யூக் 390, டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310, ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் ஜாவா 42 உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களுக்கும் நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த மாதிரியான சூழல் இந்தியாவில் நிலவிக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில், முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் (Bajaj) பெரிய எஞ்சின் கொண்ட புதிய பைக் மாடலை வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல்சர் (Pulsar) வரிசையிலேயே அந்த பெரிய மோட்டார் கொண்ட மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகின்றது. அறிவிப்பை இன்னும் பஜாஜ் வெளியிடவில்லை. அதேவேளையில், பஜாஜ் நிறுவனத்தின் சிஇஓ சிறிய குறிப்பை மட்டும் சூசகமாக வெளியிட்டு இருக்கின்றார்.

விரைவில் பஜாஜ் நிறுவனத்திடம் இருந்து இதுவரை இல்லாத பெரிய பல்சரை எதிர்பார்க்கலாம் என்றே அவர் தெரிவித்து இருக்கின்றார்.

Tags

Read MoreRead Less
Next Story