Brixton மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் 500 ரேஞ்சை crossfire அறிமுகம் !!

Brixton மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம் இந்தியாவில் 500 ரேஞ்சை crossfire அறிமுகம் !!

Brixton 

Crossfire 500X-மாடல் :

பிரிக்ஸ்டன் கிராஸ்ஃபயர் 500 ரேஞ்ச் இரண்டு மாடல்களுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது மற்றும் இதன் ஆரம்ப விலை ரூ.4.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆகும். கஃபே ரேசராக வடிவமைக்கப்பட்ட கிராஸ்ஃபயர் 500X உடன் இந்த ரேஞ்ச் தொடங்குகிறது.

இந்த ரேஞ்சில் உள்ள மற்றொரு மாடல் பிரிக்ஸ்டன் கிராஸ்ஃபயர் 500 XC ஆகும். மேற்கண்ட இரண்டு மாடலுக்கான புக்கிங்ஸ் தற்போது ரூ.2,999 என்ற பெயரளவு கட்டணத்தில் திறக்கப்பட்டுள்ள நிலையில், டெலிவரி ஜனவரி 2025-ல் தொடங்கும்.

கிராஸ்ஃபயர் 500 ரேஞ்சில் உள்ள இரண்டு மாடல்களும் 486 சிசி இன்லைன் டூ-சிலிண்டர் எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன. இது 8,500rpm-ல் 47bhp மற்றும் 6,750rpm-ல் 43Nm டார்க் திறனை வழங்குகிறது.

இந்த யூனிட் 6ஸ்பீட் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 160 கிமீ வேகத்தில் செல்லும் இது லிட்டருக்கு 25 kmpl மைலேஜ் வழங்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

Crossfire 500X-ல் சீட்டின் உயரம் 795 mm-லிருந்து 839mm-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வேரியன்ட் மேலும் ஒரு பெரிய 19-இன்ச் முன் சக்கரம் மற்றும் இரு முனைகளிலும் புதிய கிராஸ்-ஸ்போக் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, கஃபே ரேசர் வகையை விட ஸ்க்ராம்ப்ளர் ஐந்து கிலோ எடை அதிகம்.

Crossfire 500 XC மாடல் :

பிரிக்ஸ்டன் மோட்டார் சைக்கிள்ஸ் என்பது ஆஸ்திரிய பிராண்ட் ஆகும். நிறுவனம் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ள Crossfire 500 ரேஞ்ச் தவிர, இந்தியாவில் பிராண்டின் போர்ட்ஃபோலியோ Cromwell 1200 ரேஞ்சிலிருந்து இரண்டு மாடல்களை உள்ளடக்கியது.

ரூ.4.74 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரிக்ஸ்டன் கிராஸ்ஃபயர் 500X ஒரு கஃபே ரேஸர் ஆகும். இது ஃபுல்-எல்இடி லைட்டிங் அமைப்புடன் பொருத்தப்பட்டுள்ளது மற்றும் 13.5 லிட்டர் எரிபொருள் டேங்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் சைட் பேனல்கள் கருப்பு நிறத்தில் உள்ளன. புல்லட் சில்வர் மற்றும் பேக்ஸ்டேஜ் பிளாக் என 2 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் எக்ஸாஸ்ட் துருப்பிடிக்காத எஃகால் ஆனது.

இந்த பைக் 17-இன்ச் ஸ்போக் வீல்களில் டியூப்லெஸ் பைரெல்லி டயர்களைக் கொண்டுள்ளது.

Crossfire 500 XC மாடலின் விலை ரூ.5.19 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் இது Crossfire 500X-ன் ஸ்க்ராம்ப்ளர் வெர்ஷனாக உருவாக்கப்பட்டுள்ளது. கிராஸ்ஃபயர் 500 XC மாடலானது முன்புறத்தில் 150 மிமீ மற்றும் பின்புறத்தில் 130 மிமீ என அதே KYB சஸ்பென்ஷன் யூனிட்ஸ்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.

Tags

Next Story