யங்குவாங் ஹைபிரிட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்திய சீன பிஓய்டி நிறுவனம் - இந்த கார் மிதக்குமா !!!
எஸ்யூவி கார்
சீனாவை சேர்ந்த பிஓய்டி நிறுவனம் யங்குவாங் ஹைபிரிட் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் தண்ணீரில் மிதக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பார்க் செய்திருக்கும் இடத்தில் திடீரென வெள்ளம் வந்தால், இந்த கார் தொடர்ந்து 30 நிமிடங்கள் தண்ணீரில் மிதக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் வந்தவுடன் காரை அங்கிருந்து அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முடியும். மேலும் தண்ணீரில் மிதக்கும் போது இது தன்னைத் தானே 360 டிகிரி வரை சுற்றி கண்காணிக்கும் வகையிலும் இருக்கிறது. இதனால் இதை சுற்றி வரும் ஆபத்துகளை இந்த இந்த காரால் கண்காணிக்க முடியும். மேலும் இந்த காரில் சேட்டிலைட் போன் மற்றும் டுரோன் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
நீங்கள் ஏதாவது பாலத்தை கடந்து செல்லும்போது வெள்ளம் அடித்து சென்று விட்டால் கார் வெள்ளத்தில் மூழ்காமல் மிதக்கும் அந்த நேரத்தில் நீங்கள் காரில் உள்ள சேட்டிலைட் போனை பயன்படுத்தி அருகில் உள்ள மீட்பு மையத்திற்கு இந்த தகவலை தெரிவிக்க முடியும். இதனால் நீங்கள் உங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள முடியும். அப்படியாக சேட்டிலைட் போனும் இல்லாத நேரத்தில் நீங்கள் காருக்குள் இருக்கும் டுரோனை பயன்படுத்தி டுரோனை காரில் இருந்து பறக்க விட்டு அருகில் உள்ள இடத்திற்கு தகவலை தெரிவிப்பதற்காக அனுப்பி வைக்க முடியும். இதுவும் மற்ற எந்த காரிலும் இல்லாத வசதியாக இருக்கிறது. காரில் உள்ள பயணிகளின் பாதுகாப்பிற்காக இந்த வசதிகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளன.
சென்னை போன்ற அடிக்கடி வெள்ளம் பாதிக்கும் பகுதியில் வாகனம் வைத்திருப்பவர்கள் இந்த வெள்ளம் காரணமாக தங்கள் வாகனங்களை பாதுகாப்பதில் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு இந்த மாதிரியான வசதிகள் உள்ள கார்கள் நிச்சயம் உதவியாக இருக்கும் இந்தியாவில் உள்ள வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்த வசதியை தங்கள் காரில் கொண்டு வந்தால் இதன் காரணமாகவே இதன் விற்பனை அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.