10-ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களை நிறுத்துவதாக முடிவு !!

10-ஆண்டுகளில் பெட்ரோல் வாகனங்களை நிறுத்துவதாக முடிவு !!

 நிதின் கட்கரி

அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் வாகனங்களை முற்றிலும் நிறுத்துவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் வாகனங்களை முற்றிலும் நிறுத்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக வேட்பாளரும் நடிகையும்மான கங்கணா ரணாவத் ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர் தனது துறை சார்ந்த விஷயங்களையும் பேசினார். அப்போது அவர் கூறியது இப்போது மின்சாரத்தில் இயங்கும் சக்கர வாகனங்கள் பேருந்துகள் கார்கள் நமது சாலைகளில் அதிகம் பயணிக்க தொடங்கி விட்டன.

டீசலுக்கு 100 செலவிடுவதற்கு பதிலாக நான்கு ரூபாய் மின்சாரம் செலவில் வாகனங்களை இயக்க முடியும் நாட்டில் மின்சார வாகனங்களின் விற்பனை சீராக அதிகரித்து வருகிறது அரசின் வாகன் இணையதளத்தில் இது தொடர்பான விரிவான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் பாஜக வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்காமல் அவற்றை நிறைவேற்றியும் காட்டியுள்ளது.

பாஜக ஆட்சியின் சாதனைகள் மக்களை கவர்ந்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு பொய் பிரச்சாரங்களை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது உண்மையில் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான மக்கள் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்துள்ளனர்.

இந்திய வரலாற்றில் இதற்கு முன்பு எந்த ஆட்சியிலும் இந்த அளவுக்கு கிராமப்புறங்களில் சாலைகளை மேம்படுத்தப்பட்டதில்லை நாட்டின் உள்கட்டமைப்பு மேம்பாடு இதுவரை இல்லாத அளவுக்கு மேம்பட்டுள்ளது. சாலை போக்குவரத்து துறையில் மிகப்பிரமாண்டமான திட்டங்களை இந்த அரசு நிறைவேற்றியுள்ளது என்று கூறினார்.

Tags

Next Story