மாருதி எலெக்ட்ரிக் கார் எப்போ அறிமுகம் தெரியுமா..??
மாருதி எலெக்ட்ரிக் கார்
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் eVX மாடலுடன் களமிறங்க உள்ளது. 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட மாருதி eVX மாடலின் ப்ரோடக்ஷன் வெர்ஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளது.
மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் டொயோட்டா பிராண்டிங்கிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
முதற்கட்டமாக இந்தியாவில் விற்பனைக்கு வரும் மாருதி eVX மாடல் அதன்பிறகு சர்வதேச சந்தையிலும் விற்பனை செய்யப்படும் என்று தெரிகிறது. வெளியீட்டுக்கு முன் மாருதி eVX மாடல் இந்திய சாலைகளில் தொடர்ச்சியாக டெஸ்டிங் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியாகின. அதில் இந்த காரின் அளவீடுகள் கிராண்ட் விட்டாராவுக்கு இணையாக இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
எனினும், முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுவதால், இந்த கார் அதிக இடவசதியை வழங்கும் என்று தெரிகிறது.
மாருதி eVX எலெக்ட்ரிக் கார் மாடலில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த கார் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 550 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இதே காரின் குறைந்த திறன் கொண்ட பேட்டரி பேக் ஆப்ஷனும் வழங்கப்படும் என்று தெரிகிறது. அந்த வகையில், குறைந்த பேட்டரி திறன் கொண்ட மாடலின் விலை சற்றே குறைவாக இருக்கும்.