பிஎம்டபிள்யூ அறிமுகம் செய்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் !!!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் வெளியிட்டது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 90 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாடல் மூலம் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் சந்தையில் களமிறங்கி இருக்கிறது.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் பிஎம்டபிள்யூ தனது முதல் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை மட்டும் தற்போதுதான் வெளியிட்டுள்ளது. பிஎம்டபிள்யூ CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியா தவிர மற்ற நாடுகளில் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்கூட்டர் ஒற்றை வேரியண்டில் மட்டுமே கிடைக்கிறது. இது இம்பீரியல் புளூ மற்றும் லைட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிய நிலையில், வினியோகம் விரைவில் துவங்கும் என்று தெரிகிறது.