எலெக்ட்ரிக் கார், பைக் வரிசையில் 15 நிமிடத்தில் ஃபுல் சார்ஜிங்… 300 கி.மீ. தூரம் வரை செல்லும் பஸ்…

எலெக்ட்ரிக் கார், பைக் வரிசையில் 15 நிமிடத்தில் ஃபுல் சார்ஜிங்… 300 கி.மீ. தூரம் வரை செல்லும் பஸ்…

எலெக்ட்ரிக் பேருந்து 

ஒருமுறை சார்ஜிங் செய்தால் 300 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லக்கூடிய மின்சார பேருந்தை இந்திய நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதனுள் பொருத்தப்பட்ட பேட்டரி 15 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் அடைந்து விடும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

எலக்ட்ரிக் பேருந்துகளை பொறுத்தவரையில் சார்ஜிங் என்பது ஒரு பெரிய பிரச்சனை. மிகப்பெரிய வாகனத்தை இயக்கம் அளவுக்கு திறன்மிக்க பேட்டரிகள் இல்லாதது இதற்கு முக்கிய காரணம்.

இந்நிலையில் 320 கிலோ வாட் பேட்டரி திறனில் இயங்கும் பேருந்தை வீர மஹா சாம்ராட் என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பேருந்தில் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். அதன் பின்னர் சுமார் 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஓய்வு எடுத்து இடையே மீண்டும் சார்ஜிங் செய்வதன் மூலம் மீதமுள்ள தொலைவை இந்த பேருந்து கடக்கும்.

மின்சார பேருந்து வகைகளில் இது அதிக திறன்மிக்க பேருந்தாக இருப்பதால், வீர மஹா சாம்ராட் அறிமுகம் செய்துள்ள இந்த பேருந்து கவனம் பெற்று வருகிறது. இந்த பேட்டரி 6 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 3000 ஆயுள் சுழற்சிக்கான வாரண்டியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து மற்றும் பேட்டரியை பரவலாக சந்தைப்படுத்துவது குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story