விற்பனையில் அசத்தும் கிராண்ட் விட்டாரா - 2 ஆண்டுகளுக்குள் 2 லட்சம் யூனிட்கள் விற்பனையா !!!

விற்பனையில் அசத்தும் கிராண்ட் விட்டாரா - 2 ஆண்டுகளுக்குள் 2 லட்சம் யூனிட்கள் விற்பனையா !!!

கிராண்ட் விட்டாரா

இந்தியாவில் பிரபல நிறுவனமாக இருந்து வருகிறது மாருதி சுசுகி. இந்நிறுவனத்தின் எர்டிகா, ஃபிராங்க்ஸ், ஸ்விஃப்ட் மற்றும் பிரெஸ்ஸா, வேகன்ஆர் வரிசையில் சமீப காலத்தில் அதிகம் விற்பனை கார்களின் மைல்கல் சாதனையில் கிராண்ட் விட்டாரா இணைந்துள்ளது.

மாருதி சுசுகியின் கிராண்ட் விட்டாரா, 2022-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் வெறும் 22 மாதங்களில் 2 லட்சம் யூனிட் விற்பனையைத் தாண்டியுள்ளது. ஜூன் 2024 இறுதிக்குள், இது 199,550 யூனிட்களை விற்றது.

2,00,000 உள்நாட்டு விற்பனையைத் தொடுவதற்குத் தேவையான 450 யூனிட்கள் ஜூலை 2024 இறுதிக்குள், இது 199,550 யூனிட்களை விற்றது. 2,00,000 உள்நாட்டு விற்பனையைத் தொடுவதற்குத் தேவையான 450 யூனிட்கள் ஜூலை 2024 தொடக்கத்தில் எட்டியது.

இதன் மூலம் அதிவேகமாக 2 லட்சம் யூனிட்கள் விற்பனையான எஸ்யூவி என்ற பெருமையை கிராண்ட் விட்டாரா பெற்று இருக்கிறது. 25 மாதங்களில் மைல்கல்லை எட்டிய ஹூண்டாய் க்ரெட்டாவின் சாதனையை இது முறியடித்தது.

செப்டம்பர் 19, 2023 அன்று, மாருதி கிராண்ட் விட்டாரா வெறும் 12 மாதங்களில் 1 லட்சம் யூனிட் விற்பனையானதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அடுத்த 1,00,000 யூனிட்கள் வெறும் 10 மாதங்களில் விற்கப்பட்டுள்ளன.

ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஃபோக்ஸ்வேகன் டைகுன், ஸ்கோடா குஷாக், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா ஹைரைடர் போன்ற மாடல்களுடன் மிகுந்த போட்டி கொண்ட நடுத்தர எஸ்யூவி சந்தையில் நுழைந்தாலும், மாருதி கிராண்ட் விட்டாரா தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.

2024 நிதியாண்டில், அதன் விற்பனையானது, இது ஹூண்டாய் க்ரெட்டாவிற்குப் பிறகு இரண்டாவது அதிகம் விற்பனையான நடுத்தர SUV ஆகும்.

Tags

Next Story