நமது வாகனத்தின் ஆயுளை நீட்டிக்க சிறப்பான வழிமுறைகள் !!

நமது வாகனத்தின் ஆயுளை நீட்டிக்க சிறப்பான வழிமுறைகள் !!

ஆட்டோ மொபைல்


நமது வாகனத்தின் ஆயுளை நீட்டிக்க வேண்டும் என்றால் சிறப்பான பராமரிப்பு என்பது முக்கியம். மேலும் அவற்றை பராமரிப்பதும் மிகவும் எளிதானதாகும். இதில் பைக்குகளைவிட ஸ்கூட்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். ஸ்கூட்டரை நன்கு பராமரித்தால், அதன் ஆயுளும், திறனும் அதிகரிக்கும்.

*பிற வாகனங்களைப் போலவே, தயாரிப்பு நிறுவனம் பரிந்துரைத்த அட்டவணையின்படி ஸ்கூட்டர்களை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும்.

* என்ஜின் ஆயில் அளவை அடிக்கடி சரிபார்க்க வேண்டும்.ஸ்கூட்டரின் செயல்திறனைப் பராமரிப்பதில் என்ஜின் ஆயில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

*என்ஜின் ஆயில் என்பது இன்ஜினின் உயிர்நாடி மற்றும் ஸ்கூட்டரின் நீண்ட கால செயல்திறனை பராமரிப்பதில் இன்றியமையாத அங்கமாகும். கலப்படம் செய்யப்பட்ட என்ஜின் ஆயிலை பயன்படுத்தும்போது, ​​என்ஜினின் செயல்திறன் குறைகிறது. எனவே சரியான என்ஜின் ஆயிலை தேர்ந்தெடுத்து ஸ்கூட்டரின் செயல்திறன் மற்றும் ஆயுளை அதிகரிக்கவும்.

*எஞ்சின் செயல்திறனை சிறப்பாக வைத்திருக்க, ஏர் ஃபில்டரை எப்போதும் சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் ஃபில்லரில் தூசி மற்றும் அழுக்கு படிந்தால் இன்ஜின் சேதமடைய வாய்ப்பு உள்ளது.

*சவாரி செய்வதற்கு முன் ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்களுக்கு என்ஜினை செயலற்ற நிலையில் வைத்திருக்க அனுமதிப்பதன் மூலம் சேதத்தைத் தவிர்க்கலாம்.

Tags

Next Story