டாடா நிறுவனம் ஹாரியர் சபாரி மாடல் கார் அறிமுகம் செய்துள்ளதா.....?

டாடா நிறுவனம் ஹாரியர் சபாரி மாடல் கார் அறிமுகம் செய்துள்ளதா.....?

ஹாரியர் சபாரி 

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஹாரியர் மற்றும் சபாரி மாடல் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் இரண்டு எஸ்.யு.வி. மாடல்களுமே170 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும் வகையில் 2 லிட்டர் டீசல் என்ஜினைக் கொண்டது.

இதில் 6 கியர்கள் மற்றும் ஆட்டோமேடிக் கியர் மாடலும் கிடைக்கும். இது எரிபொருள் சிக்கமானது. இந்த காரின் சோதனை ஓட்டத்தில் 16.80 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹாரியர் மற்றும் சபாரி மாடல்களில் விருப்பமான காரை ரூ.25 ஆயிரம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி, பாதுகாப்பை உறுதி செய்ய 7 ஏர் பேக்குகள், இனிய இசையை வழங்க ஹர்மான் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், முகப்பில் எல்.இ.டி.புரொஜெக்டர் விளக்கு போன்ற அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இவ்விரு மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story