ஹோண்டா நிறுவனம் தகவல் ; என்னது 3 மாடல்களுக்கு தள்ளுபடியா !!

ஹோண்டா நிறுவனம் தகவல் ; என்னது 3 மாடல்களுக்கு தள்ளுபடியா !!

ஹோண்டா நிறுவனம்

நீங்கள் ஹோண்டா எலிவேட் வாங்க திட்டமிட்டிருந்தால் உண்மையில் இந்த மாதம் சரியானது. மேற்சொன்னது போல எலிவேட் எஸ்யூவி-க்கு நிறுவனம் முதல் முறையாக ரூ.50,000 தள்ளுபடியை வழங்குவதால் உங்களது பர்ச்சேஸிங் பிளானை செயல்படுத்த வேண்டிய மாதம் இதுவாக இருக்கலாம்

ஹோண்டா எலிவேட் ; ரூ.50,000 வரை சேமிக்கலாம். இந்த மார்ச் மாதத்தில் எலிவேட் காருக்கு ரூ.50,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட்டை ஹோண்டா நிறுவனம் வழங்குகிறது. இருப்பினும் இந்த தள்ளுபடி தொகை வேரியன்ட்டை பொறுத்து மாறுபடும். எலிவேட் மாடலுக்கு இந்த மாதம் எக்ஸ்சேஞ்ச் போனஸ் அல்லது கார்ப்பரேட் ஆஃபர்கள் எதுவும் இல்லை.

மாதத்திற்கு சராசரியாக 4,000 யூனிட்ஸ்களை விற்பனை செய்யும் ஹோண்டாவிற்கு SUV சிறப்பான விற்பனை செயல்திறனை பதிவு செய்து வருகிறது.

வசதியான மற்றும் விசாலமான கேபின், சிறந்த ரைட் மற்றும் ஹேண்ட்லிங்க் பேலன்ஸுடன் கூடிய சிறந்த SUV-யாக எலிவேட் இருக்கிறது. எலிவேட் 121hp, 1.5-லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன்வருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.11.58 லட்சம் முதல் 16.20 லட்சம் வரை இருக்கிறது.

ஹோண்டா அமேஸ் ; ரூ.90,000 வரை சேமிக்கலாம் அமேஸ் மாடலுக்கு இந்த மாதம் வேரியன்ட் அடிப்படையில் ரூ.35,000 வரை கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.41,653 மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்கள் கிடைக்கும். இதை தவிர ரூ.20,000 வரையிலான கார்ப்பரேட் போனஸ், ரூ.10,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.4,000 வரையிலான

லாயல்டி போனஸ் உள்ளிட்டவையும் மார்ச் மாத சலுகையில் அடங்கும். கூடுதலாக அமேஸின் எலைட் ட்ரிமில் மட்டும் ரூ.30,000 வரை ஸ்பெஷல் எடிஷன் பெனிஃபிட் உள்ளது. இந்த காம்பேக்ட் செடான் 90hp, 1.2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது.

இதன் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.7.16 லட்சம் முதல் 9.92 லட்சம் வரை இருக்கிறது.

ஹோண்டா சிட்டி ; ரூ.1.20 லட்சம் வரை சேமிக்கலாம் ஹோண்டா நிறுவனம் தந்து சிட்டி கார்களுக்கு வழங்கும் சலுகைகளில் ரூ.30,000 வரையிலான கேஷ் டிஸ்கவுண்ட் அல்லது ரூ.32,196 வரை மதிப்புள்ள இலவச ஆக்சஸரீஸ்களை வாடிக்கையாளர் தேர்வு செய்யலாம். ஹோண்டா சிட்டிக்கு வழங்கப்படும் சலுகைகளில் ரூ.15,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.20,000 வரையிலான கார்ப்பரேட் போனஸ் மற்றும் ரூ.4,000 லாயல்டி போனஸ் உள்ளிட்டவை அடங்கும். கூடுதலாக, இதன் எலிகன்ட் டிரிமில் ரூ.36,500 வரையிலான ஸ்பெஷல் எடிஷன் பெனிஃபிட்டையும் , VS மற்றும் ZX டிரிம்களில் ரூ.13,651 மதிப்புள்ள நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் வழங்கப்படுகிறது.

Tags

Read MoreRead Less
Next Story