மே மாத சலுகைகளை அறிவித்த ஹோண்டாய் நிறுவனம் !!!

மே மாத சலுகைகளை அறிவித்த ஹோண்டாய் நிறுவனம் !!!

ஹோண்டாய் நிறுவனம்

ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தைகள் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. இவை ஹோண்டாய் i20 கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ மாடல்கள் மட்டுமின்றி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் மாடலுக்கும் வழங்கப்படுகிறன.

அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரா மாடலுக்கு முதன் முறையாக சலுகைகளை வழங்குகிறது. வெர்னா, கிரேட்டா, அல்கசார் மற்றும் டக்சன் மாடல்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை.

மேலும் இந்த சலுகைகளை ஒவ்வொரு மாநிலம் ஸ்டாக் இருப்பு மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுபடும் ஹோண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கு ரூபாய் பத்தாயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் எக்ஸ்ட்ரா மாடல் 8000 யூனிட்கள் விற்பனை ஆகிறது. இந்த கார் மொத்தத்தில் 17 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ₹6,13,000 என துவங்கி அதிகபட்சம் ரூபாய் பத்து லட்சத்து 28 ஆயிரம் எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கார் 83 எச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மேனுவல் மற்றும் AMT கியர் பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

இத்துடன் 69 எச்பி பவர் வெளிப்படுத்தம் சிஎன்ஜி ஆப்ஷனும் வழங்கப்படுகிறது, எனினும் இது மேனுவல் ஆப்ஷன் மட்டுமே கிடைக்கிறது. மாடலுக்கு அதிகபட்சம் ரூபாய் 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

இதில் ரூபாய் 25 ஆயிரம் வரை தள்ளுபடி தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் அடங்கும். கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

ஹூண்டாய் i20 மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடலான i20 மொத்தத்தில் 21 வேரியண்ட்கல் கிடைக்கிறது.

இதன் விலை ரூ. 7.04 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12.52 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.




Tags

Next Story