CB500 ஹார்னெட் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு இந்திய சந்தையில் காப்புரிமை பெற்ற ஹோண்டா நிறுவனம் !!

CB500 ஹார்னெட் மோட்டார்சைக்கிள் மாடலுக்கு இந்திய சந்தையில் காப்புரிமை பெற்ற ஹோண்டா நிறுவனம் !!

CB500 ஹார்னெட்

ஹோண்டா இந்திய நிறுவனம் இந்திய இருசக்கர வாகனங்கள் சந்தையின் மிடில் வெயிட் பிரிவில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஹோண்டா நிறுவனம் சிபி 500 ஹெர்னெட் மோட்டார் சைக்கிள் மாடலுக்கு இந்திய சந்தையில் காப்புரிமை பெற்று இருக்கிறது.

சிபி500 ஹெர்னெட் மோட்டார் சைக்கிள் ஸ்டிரீட் நேக்கட் மோட்டார் சைக்கிள் ஆகும். இந்த மோட்டார் சைக்கிள் EICMA 2023 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இந்த பைக்கின் ஸ்டைல் கவர்ச்சிகரமாக காட்சி அளிக்கிறது. இந்த மாடல் எல்இடி ஹெட் லைட் கிளஸ்டர், மஸ்குலர் ஃபியூவல் டேன்க், டேன்க் எக்ஸ்டென்ஷன்கள் மற்றும் மெல்லிய டெயில் பகுதி வழங்கப்படுகிறது.

ஸ்டிரீட் நேக்கட் பைக்கில் 471சிசி, டுவின் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 47 ஹெச்.பி. பவர், 43 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

புதிய ஹோண்டா பைக்கில் எல்.இ.டி. லைட்டிங், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 5 இன்ச் அளவில் டி.எஃப்.டி. டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி வழங்கப்படுகிறது.

இந்த பைக் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில், இது இந்தியாவில் ஹோண்டாவின் முதல் 500சிசி, ஸ்டிரீட் நேக்கட் பைக் மாடலாக இருக்கும்.

Tags

Next Story