ஹோண்டா நிறுவனம் புதிய கார் அறிமுகம் செய்துள்ளதா?...வாங்க பார்க்கலாம்!!!

ஹோண்டா நிறுவனம் புதிய கார் அறிமுகம் செய்துள்ளதா?...வாங்க பார்க்கலாம்!!!

சிஆர்-வி (CR-V) 

உலகின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா (Honda), அதன் அதிக சிறப்புகளைத் தாங்கிய சிஆர்-வி (CR-V) கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது.

இந்த சூப்பரான கார் பற்றிய கூடுதல் விபரங்களையே பார்க்கலாமா ; ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் 2025 சிஆர்-வி இ-எஃப்சிஇவி (CR-V e-FCE) காரை அமெரிக்க சந்தையில் வெளியீடு செய்து இருக்கின்றது.

இந்த வெளியீடு நிகழ்வு மற்ற நாடுகளில் உள்ள ஹோண்டா கார் பிரியர்களை சற்றே பொறாமையில் ஆழ்த்தி இருக்கின்றது என கூறலாம்.

ஏனெனில் அந்தளவிற்கு அதிக சிறப்புமிக்க காராகவே இதனை அமெரிக்கர்களுக்காக தயார் செய்து தற்போது அங்கு அறிமுகம் செய்திருக்கின்றது, ஹோண்டா. 2025 மாடல் என கூறப்படும் இது ஓர் மின்சாரத்தில் இயங்கும்

அம்சம் கொண்ட ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். தற்போது அமெரிக்காவில் போதுமான ஃப்யூவல் செல் நிரப்பும் நிலையங்கள் இல்லாத காரணத்தினாலேயே இந்த வசதியுடன் தன்னுடைய காரை வடிவமைத்திருக்கின்றது, ஹோண்டா நிறுவனம்.

எனவே ஃப்யூவல் செல் நிலையங்கள் தட்டுப்பாடு உள்ள நேரங்களில் ஹோண்டா சிஆர்-வி கார் பயன்பாட்டாளர்களால் அந்த காரை சார்ஜிங் பாயிண்டில் வைத்து சார்ஜ் செய்து இயக்கிக் கொள்ள முடியும்.

ஓர் முழு சார்ஜில் இந்த கார் 47 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இதற்காக மிகப் பெரிய பேட்டரி பேக்கை இந்த காரில் ஹோண்டா வழங்கி இருக்கின்றது. இந்த மாதிரியான ஓர் வசதியுடன் வேறு எந்த காரும் அமெரிக்காவில் விற்பனைக்குக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த காரில் எலெக்ட்ரிக் கார் முன் பக்கத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இது 174 எச்பி மற்றும் 311 என்எம் டார்க்கை வெளியேற்றும்.

இத்துடன், 17.7 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடனேயே ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லை நிரப்பிக் கொள்ளும் சிலிண்டர் அமைப்பும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக நிரப்பும்பட்சத்தில் 435 கிமீ தூரம் வரை பயணித்துக் கொள்ள முடியும் என கூறப்படுகின்றது.

Tags

Next Story