ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் !!

ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்ட தகவல் !!

ஆட்டோ மொபைல்

இந்திய ஆட்டோமொபைல் டீலர் சங்கம் கூட்டமைப்பு நாட்டில் அதிகரித்து வரும் நிலையில் விற்பனை ஆகாத பயணிகள் வாகன எண்ணிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இது குறிஅந்த அமைப்பு வெளியிட்ட தகவல் இந்தியாவில் சுமார் 7.9 லட்சம் கார்கள் விற்பனையாகாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்தியாவில் உள்ள விற்பனையாகாத கார்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 79 ஆயிரம் கோடி எனவும் நாட்டில் விற்பனையாகாத கார் யூனிட்களால் விற்பனை மையங்கள் நிதி சார்ந்த பிரச்சனைகளையும் எதிர்கொண்டுள்ளன. கார் உற்பத்தியாளர்கள் அதிக யூனிட்களை உற்பத்தி செய்தது, நுகர்வோர் கார் வாங்க ஆர்வம் செலுத்தவில்லை மற்றும் கடுமையான கனமழை உள்ளிட்ட காரணங்களால் கார் விற்பனை ஆகவில்லை கூறப்படுகின்றன.

கார்கள் விற்பனையின்றி தேக்கம் அடைவதால், பல்வேறு விற்பனை மையங்களில் நிதி பற்றாக்குறை சூழல் உருவாகி வருவதாக ஆட்டோமொபைல் டீலர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சி.எஸ். விக்னேஷ்வர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story