iVOOMi S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !!

iVOOMi S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் !!

iVOOMi S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை லைட் வேரியன்ட்டை அறிமுகம் செய்துள்ளது iVOOMi எனர்ஜி நிறுவனம்.S1 லைட் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 180கிமீ தூரம் வரை செல்லும். இதன் மூலம் இந்தியாவின் மிகவும் சிக்கனமான மற்றும் அதிவேக இ-ஸ்கூட்டராக iVOOMi S1 Lite உள்ளது. இந்த ஸ்கூட்டர் USB சார்ஜிங் போர்ட் (5V, 1A) மற்றும் வேகத்தை எளிதாகக் கண்காணிப்பதற்கான LED டிஸ்ப்ளே ஸ்பீடோமீட்டர் போன்ற பயனுள்ள அம்சங்களுடன் வருகிறது. புதிய iVOOMi S1 Lite ஸ்கூட்டரானது நம்பகத்தன்மை மற்றும் செயல்திறனுக்கான அட்வான்ஸ்ட் பேட்டரி டெக்னலாஜியை கொண்டுள்ளது. இது இந்தியாவின் லைட்வெயிட் சார்ஜர் மற்றும் நீடித்துழைப்பதற்காக வாட்டர்-ரெசிஸ்டென்ட் IP67 பேட்டரியை கொண்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 53 கிமீ வேகத்தில் செல்லும்.ஸ்கை ப்ளூ, டார்க் ப்ளூ, கிரே, ரெட், மெரூன் மற்றும் ஒயிட் உள்ளிட்ட கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள iVOOMi S1 Lite ஹை-ஸ்பீட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.84,999-ல் இருந்து தொடங்குகிறது.

Tags

Next Story