பைக்குகளுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவித்த கவாஸாகி நிறுவனம் !!
கவாஸாகி நிறுவனம்
சூப்பர் பைக் தயாரிக்கும் கவாஸாகி நிறுவனம் தற்போது சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த டிசம்பர் மாதத்தில் பல வாகன உற்பத்தியாளர்கள் பைக்குகள், ஸ்கூட்டர்கள் மற்றும் கார்களுக்கு சிறந்த சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்நிலையில் தற்போது கவாஸாகி நிறுவனம் தனது நிஞ்ஜா சீரிஸ் பைக்குகளுக்கு சிறந்த சலுகையை வழங்கியுள்ளது. இந்த ஜப்பானிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர் இந்திய சந்தையில் அதன் மூன்று நிஞ்ஜா பைக்குகளுக்கு சிறப்பு தள்ளுபடி சலுகைகளை வழங்குகிறது.
இந்த தள்ளுபடி சலுகையின் கீழ், கவாஸாகி நிஞ்சா 500, அதிகம் விற்பனையாகும் இந்த பைக்கில், நிறுவனம் ரூ. 30,000 தள்ளுபடியை வழங்கியுள்ளது. இதன் காரணமாக நிஞ்சா 300 இன் விலை இப்போது ரூ. 3.13 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக குறைக்கப்பட்டது.
கவாஸாகி நிஞ்சா 300 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பைக். இந்த பைக்கின் விலை ரூ. 5.09 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக குறைக்கப்பட்டது.
கவாஸாகி நிஞ்சா 650 பைக்கின் விலை ரூ.7.47 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக குறைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பைக்கின் விலைகளும் எக்ஸ்-ஷோரூம் மற்றும் நகரங்கள் மற்றும் மாநிலங்களைப் பொறுத்து மாறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.