மஹிந்தராவின் (தார் ) vs மாருதி சுசூகி (ஜிம்னி) எது அதிக விற்பனை பார்ப்போமா...

மஹிந்தராவின் (தார் ) vs மாருதி சுசூகி (ஜிம்னி)  எது அதிக விற்பனை பார்ப்போமா...

மஹிந்தராவின் (தார் ) vs மாருதி சுசூகி (ஜிம்னி)

மஹிந்தராவின் தார் (Thar) காருக்கும் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஜிம்னி (Jimny) காருக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது. உண்மையிலேயே இது நிஜம்தானா? இரண்டு கார்களுமே சிறந்த ஆஃப் ரோடு வாகனங்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இரண்டு கார்களின் விற்பனை எண்ணிக்கையை பார்த்தோமென்றால், மலைக்கும் மடுவிற்கும் உள்ள வித்தியாசம் இருக்கிறது.

2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் மஹிந்தராவின் Thar 6,059 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. ஆனால் மாருதியின் Jimny வெறும் 163 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. மஹிந்தராவின் விற்பனை எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளதை இதிலிருந்து தெரிந்துகொள்ள முடியும். மஹிந்தராவின் Thar காரின் ஆரம்ப விலை ரூ.11.25 லட்சத்தில் தொடங்கி ரூ.17.20 லட்சம் வரை உள்ளது. அதுவே மாருதி நிறுவனத்தின் Jimny காரை எடுத்துக் கொண்டால், இதன் ஆரம்ப விலை ரூ.12.74 லட்சத்தில் தொடங்கி ரூ.14.95 லட்சம் வரை உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story