மாருதி சுஸுகி நவம்பர் 11 அன்று டிஸையர் மாடல் வெளியீடுவதாக தகவல் - முன்பதிவு ஆரம்பம் !!
மாருதி சுஸுகி
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பாளரான மாருதி சுஸுகி, ஒருவழியாக அதன் 4வது தலைமுறை டிஸையருக்கு (Dezire) அதிகாரப்பூர்வ முன்பதிவுகளை ஏற்கத் தொடங்கியுள்ளது.
இந்தக் காரை வாங்க விரும்பும் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள், முழுமையாக திரும்பப் பெறக்கூடிய டோக்கன் தொகையான ரூ.11,000ஐ செலுத்தி இப்போதே காம்பாக்ட் செடானை முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
இந்த காரை நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மாருதி சுசூகி டீலர்ஷிப்பிற்கு நேரில் சென்றோ அல்லது அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாகவோ ஆன்லைனில் பதிவு செய்யலாம். நவம்பர் 11 அன்று இந்தக் கார் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட டிஸையர் முற்றிலும் புதிய அம்சத்துடன் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது. முழுமையாக புதுப்பிக்கப்பட்ட முன்பக்க வடிவமைப்பு மற்றும் புதிய கிரில், LED ஹெட்லைட் அமைப்பு மற்றும் நேர்த்தியான DRL-கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
ஆன்ட்ராய்டு, ஆப்பிள் மற்றும் ஆட்டோ கார் ப்ளே உள்ளிட்ட அனைத்து வயர்லெஸ் கார் இணைப்பு தொழில்நுட்பமும் உள்ளது.புதுப்பிக்கப்பட்ட புதிய டிஸையர் காரில் தற்போதைய மாடலில் உள்ள அதே இஞ்சின் தான் பயன்படுத்தப்படுகிறது. இது அதிகபட்சமாக 80 bhp பவரையும், 112 Nm இழுவிசையையும் கொண்டுள்ளது.