புது ஹைப்பர் கார் அறிமுகம் - இதன் விலை ரூ.33 கோடி !!

புது ஹைப்பர் கார் அறிமுகம் - இதன் விலை ரூ.33 கோடி !!

புகாட்டி டூர்பில்லன்

புகாட்டி நிறுவனத்தின் "டூர்பில்லன்" புதிய ஹைப்பர் கார் உலக சந்தையில் வெளியாகி உள்ளது. புதிய புகாட்டி டூர்பில்லன் மாடல் கார் சிரோனுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த கார் புதிய தோற்றத்தைக் கொண்டுள்ளது.

இத்துடன் முற்றிலும் புதிய பவர்டிரெய்ன் மற்றும் மெக்கானிக்கல்களையும் கொண்டுள்ளது. இதில் V16 என்ஜின்களைக் கொண்டிருப்பதால் இது புகாட்டியின் முதல் ஹைப்பர் கார் ஆகும்.

புகாட்டி தனது புதிய ஹைப்பர் காரை வெறும் 250 யூனிட்கள் மட்டும் உற்பத்தி செய்கிறது. இந்த மாடலின் ஆரம்ப விலை 3.2 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.33 கோடி ஆகும். டூர்பில்லன் ஹைப்பர் காரின் முன்புறத்தில் ஒரு பெரிய ஹார்ஸ் ஷூ வடிவ கிரில் உள்ளது. இருபுறமும் குவாட் LED ஹெட்லேம்ப்கள் உள்ளன.

காரின் பின்புறத்தில் முழு அகல எல்இடி விளக்குகளின் மத்தியில் 'புகாட்டி' என்ற எழுத்து இடம்பெறுகிறது. டூர்பில்லன் முற்றிலும் மாற்றிஅமைக்கப்பட்ட கேபின் மற்றும் டேஷ்போர்டு அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த ஹைப்பர் காரில் வி16 ஹைப்ரிட் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. IC என்ஜின் மட்டும் 1000 ஹெச்.பி. பவர் மற்றும் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது மூன்று மின்சார மோட்டார்களுடன் இணைந்து, ஹைப்பர் காருக்கு மொத்தமாக 1,800 ஹெச்.பி. பவர் வழங்குகிறது. புதிய பவர்டிரெய்ன் 8-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

டூர்பில்லன் 100 கி.மீ. வேகத்தை 2 வினாடிகளிலும், அதே நேரத்தில் 299 வேகத்தை 10 வினாடிகளிலும் கடந்துவிடும். புகாட்டி டூர்பில்லன் மணிக்கு அதிகபட்சமாக 445 கிமீ/மணி வேகத்தில் செல்லும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.

Tags

Next Story