வெளிநாட்டு மக்களிடம் மாஸ் காட்டும் நிஸான் நிறுவனம் !!
நிஸான் நிறுவனம்
ஜூன் மாதம் தொடங்கியுள்ள நிலையில் கடந்த மே மாத விற்பனை நிலவரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. நிஸான் நிறுவனமும் தனது வாகன தயாரிப்பு நிலவரம் குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த மே மாதம் இந்நிறுவனம் மொத்தமாக 6204 வாகனங்களை தயாரித்து விற்பனைக்காக அனுப்பி உள்ளது.
நிஸான் நிறுவனம் கடந்த மே மாதம் ஏற்றுமதியை அதிகம் செய்துள்ளது மொத்தம் 3,993வாகனங்களை இந்நிறுவனம் இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் வெறும் 639 வாகனங்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருந்தது.
அத்துடன் ஒப்பிடும்போது தற்போது 99சதவீதம் ஏற்றுமதி என்பது அதிகமாகியுள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 2,013 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. அதை ஒப்பிடும்போதும் தற்போது கிட்டத்தட்ட இருமடங்காக ஏற்றுமதி அதிகமாக செய்துள்ளது.
நிஸான் நிறுவனம் கடந்த மே மாதம் மொத்தம் 1.4 லட்சம் வாகனங்களை உள்நாட்டிலும், ஏற்றுமதிக்கும் செய்து மிக முக்கியமான மைல் கல்லை எட்டிப் பிடித்தது. இந்நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களை 15 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. முக்கியமாக வங்கதேசம்,உகாண்டா, புருனே, மத்திய கிழக்கு நாடுகள், சவுதி அரேபியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
ஏற்றுமதியில் இந்நிறுவனம் கவனம் செலுத்தி வரும் நிலையில் உள்நாட்டிலும் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளை மக்கள் வாங்குவதற்காக தனது நெட்வொர்க்கை பெரிது பிடுத்துக் கொண்டே இருக்கிறது. சமீபத்தில் கூட தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் இந்நிறுவனத்தின் ஷோரூம் திறக்கப்பட்டது. இந்தியா முழுவதும் 272 ஷோரூம் செயல்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டு இன்னும் இதன் எண்ணிக்கை அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.
நிஸான் நிறுவனம் சமீபத்தில் தான் தனது மேக்னெட் காரில் கீஸா சிவிடி ஸ்பெஷல் எடிசன் காரை அறிமுகப்படுத்தியது. இந்த கார் ரூ9.84 லட்சம் என்ற விலையில் விற்பனைக்காக அறிமுகமானது. இது குரோ பிளாக் எடிஷனுக்கு மேலே பொசிஷன் செய்யப்பட்டது. நிஸான் நிறுவனம் தான் இந்தியாவிலேயே குறிப்பிட்ட செக்மெண்டில் குறைந்த விலையில் சிவிடி கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக பெயர் பெற்றுள்ளது. முக்கியமாக இந்த காரின் விலை ரூ10 லட்சத்திற்கும் குறைவானது.
நிஸான் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவுக்கு மவுசு இல்லை. இதற்கு காரணம் இந்தியாவில் இருக்கும் போட்டிதான் இந்தியாவில் போட்டியில் தயாரிப்புகள் பல நிஸான் நிறுவனம் தயாரிக்கும் தயாரிப்புகளையும் தாண்டி பெயர் பெற்ற தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன. இதனால் நிஸான் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது.