இனி இறந்தவர்கள் உடனும் பேசலாம்!! வெறும் ரூ.235 தான்!

இனி இறந்தவர்கள் உடனும் பேசலாம்!! வெறும் ரூ.235 தான்!

AI தொழில்நுட்பம்

சீன நாட்டிலும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, மக்கள் தங்களின் மறைந்த அன்புக்குரியவர்களை AI தொழில்நுட்பம் மூலம் தொடர்பு வைத்துக்கொள்ள முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. AI உதவியுடன் அவர்களின் மறைந்த அன்புக்குரியவர்களின் டிஜிட்டல் அவதாரை உருவாக்கி, அதனுடன் நீங்கள் உரையாடலை மேற்கொள்ளலாம். இதற்கு 20 யுவான் செலவாகும். அதாவது இந்திய மதிப்பில் 235 ரூபாயாகும். சீனாவின் முன்னணி AI நிறுவனமாக அறியப்படும் SenseTime நிறுவனமும் அதன் முழு திறனை வெளிக்காட்டும் வகையில் சமீபத்தில் ஒரு செயலில் இறங்கி அதில் வெற்றியும் அடைந்தது. அதாவது, அந்த நிறுவனத்தின் நிறுவனரான Tang Xiao'ou உயிரிழந்துவிட்டார். இந்நிலையில், அவரின் அவதாரை AI மூலம் உருவாக்கி நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வைத்துள்ளனர். மூக வலைதளங்களில் சில நாள்களுக்கு முன் மறைந்த பாடகர் Qiao Renliang என்பவரின் பழைய வீடியோ மற்றும் ஆடியோக்கள் மூலம் புதிய பாடல் ஒன்றை நெட்டிசன்கள் உருவாக்கி வைரலாக்கியது. அந்த பாடகரின் குடும்பத்தின் தரப்பில் இருந்து கடுமையான பிரச்னை எழுந்தது.இது எப்படி பலருக்கும் நன்மையை அளிக்கிறதோ அதேபோன்று தொந்தரவையும் அளிப்பதையும் மறக்க முடியாது.

Tags

Next Story