மூன்று கதவுகள் மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்டில் போர்ஸ் குர்கா இந்தியாவில் அறிமுகம் !!

மூன்று கதவுகள் மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்டில் போர்ஸ் குர்கா இந்தியாவில் அறிமுகம் !!

போர்ஸ் மோட்டார்ஸ்

போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய அம்சங்களுடன் 2024 குர்கா சீரிஸ்மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2024 போர்ஸ் குர்கா மாடலின் மூன்று கதவுகள் கொண்ட மாடலின் விலை ₹ 16,75,000 என்றும் ஐந்து கதவுகள் கொண்ட மாடல் விலை ரூபாய் 18 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு வருகிறது. 2024 போர்ஸ் குர்கா மாடல்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூபாய் 25 ஆயிரம் ஆகும்.

2024 குர்கா மாடல்-ன் வெளிப்புறம் புதிய அலாய் வீல்கள் ஹெட் லேம்ப்கள் மற்றும் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது. மேற்கவர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது.

இதனுடன் TPMS, முன்புறம் டூயல் ஏர்பேக், 8.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய குர்கா மாடலில் 2.6 லிட்டர் டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 132 ஹெச்பி பவர் 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

இந்த காரின் மூன்று கதவுகள் மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்டில் நாலு வீல் டிரைவ் வசதி ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய போர்ஸ் குர்கா மாடல் மாருதி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் என்ட்ரி லெவல் மாடலுக்கு போட்டியாகவும் உள்ளது.

Tags

Next Story