Range Rover Velar கார்!! கிட்டத்தட்ட ரூ.1 கோடி.. !!
Range Rover Velar
ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) நிறுவனமானது தனது Range Rover Velar காரின் விலையை ரூ.6.40 லட்சம் வரை குறைத்துள்ளது.024 Velar மாடலானது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களுடன் கூடிய சிங்கிள் டாப்-ஸ்பெக் HSE ட்ரிமில் கிடைக்கிறது.முந்தைய மாடலுடன் ஒப்பிடும்போது, 2024 Velar அதன் முன்பக்கத்தில் பிக்சல் எல்இடி செட்டப் மற்றும் பின்புறத்தில் புதிய டெயில்-லைட் கொண்ட புதிய லைட்டிங் சிக்னேச்சரை பெறுகிறது. புதிய ஃப்ரன்ட் மற்றும் ரியர் பம்ப்பர்ஸ், புதிய அலாய் வீல்ஸ், டே டைம் ரன்னிங் லைட்ஸ் உள்ளிட்டவையும் கொடுக்கப்பட்டுள்ளன.ஃப்யுஜி ஒயிட் மற்றும் சான்டோரினி பிளாக் கலர் ஆப்ஷன்களுடன் மெட்டாலிக் வரசின் ப்ளூ மற்றும் பிரீமியம் மெட்டாலிக் ஜாடர் கிரே உள்ளிட்ட 2 புதிதாய் கலர்களும் வழங்கப்படுகின்றன.11.4-இன்ச் கர்வ்ட் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிறீனிற்கு மாற்றியுள்ளது.இந்த சொகுசு SUV-யானது அன்டர்-பானெட் வியூவுடன் கூடிய 360 டிகிரி கேமரா, 20-வே மசாஜ் ஃப்ரன்ட் சீட்ஸ் , பின்புற இருக்கைகளுக்கு power recline, ஏர் ப்யூரிஃபையர் , வயர்லெஸ் சார்ஜிங், மல்டிகலர் அம்பியன்ட் லைட்டிங், 12-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம், பவர்ட் டெயில்கேட், பனோரமிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் பேட் மற்றும் 4-ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், அட்வான்ஸ் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம்ஸ் (ADAS), மெட்டல் பெடல்ஸ், எலக்ட்ரிக் ஏர் சஸ்பென்ஷன், டிரைவர் சீட் மெமரி செட்டிங், ஆன்போர்ட் அமேசான் அலெக்ஸா அசிஸ்டென்ட், டெரெய்ன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இரண்டு 2-லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் அடங்கும். 8-ஸ்பீட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் 2 என்ஜின்களுக்கும், 4 வீல்ஸ்களுக்கும் பவரை அனுப்புகிறது.