ஓலா நிறுவனம் தயாரிப்பில் தானியங்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டீசர் வெளியிடு !

ஓலா நிறுவனம் தயாரிப்பில் தானியங்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டீசர் வெளியிடு !

ஓலா ஸ்கூட்டர் 

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான பாவிஷ் அகர்வால் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசரை வெளியிட்டுள்ளார்.

ஓலா சோலோ என்று அழைக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகின் முதல் தானியங்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விவரங்கள் எதையும் அறிவிக்காமல், அது தொடர்பான வீடியோவை பாவிஷ் அகர்வால் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் வெளியிட்டு இருந்தார்.

பலரும் இப்படி ஒரு வாகனம் சாத்தியமில்லை என்றும், இது மக்களை முட்டாளாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டு இருக்கிறது என்றும் கமெண்ட் செய்தனர்.

எதிர்கால மொபிலிட்டி மற்றும் எங்களது பொறியியல் குழுக்கள் தானியங்கி, தானாக பேலன்ஸ் செய்து கொள்ளும் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருகின்றன.

இவற்றை எங்களது எதிர்கால வாகனங்களில் நீங்கள் பார்க்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story