ரோவர் நிறுவனம் - எலெக்ட்ரிக் மாடல் ஜாகுவார் லேண்ட் அறிமுகம் செய்ய திட்டம் !!!!

ரோவர் நிறுவனம் - எலெக்ட்ரிக் மாடல் ஜாகுவார் லேண்ட் அறிமுகம் செய்ய திட்டம் !!!!

எலெக்ட்ரிக் ஜாகுவார் லேண்ட்

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் முற்றிலும் புதிய ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.

2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய ஜாகுவார் லேண்ட் ரோவர் முடிவு செய்துள்ள நிலையில், இது அந்த பட்டியலில் இரண்டாவது எலெக்ட்ரிக் கார் மாடலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ரி-இமாஜின் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஸ்டிராடஜி என்ற திட்டத்தை உருவாக்கி இருப்பதாக அதன் தலைமை செயல் தெய்ரி பாலோர் தெரிவித்து இருக்கிறார்.

தற்போது ஜாகுவார் லேண்ட் ரோவர் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் அட்ரியன் மார்டெல் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து மேம்பட்ட திட்ட விவரங்களை வெளியிட்டுள்ளார்.

புதிய தொழில்நுட்பம் கொண்டு இதுவரை நாங்கள் உருவாக்கியதிலேயே மிகவும் சிறப்பான வாகனங்களை உற்பத்தி செய்வதில் நாங்கள் கவனமுடன் பணியாற்றி வருகிறோம்," என்று தெரிவித்தார்.

அதில், "2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு லேண்ட் ரோவர்கள் பற்றி தெரிவித்து இருந்தோம். 2026 ஆம் ஆண்டிற்குள் ஆறு ஜாகுவார் லேண்ட் ரோவர் மாடல்களை வைத்திருப்பது கிட்டத்தட்ட சாத்தியமாகி வருகிறது.

தற்போது மாற்றப்பட்ட புதிய திட்டப்படி ரேன்ஜ் ரோவர் EV மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் EV மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் EV மாடல் முதலில் அறிமுகம் செய்யப்படுகிறது. இரு மாடல்களும் MLA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது.

இவற்றுடன் இரண்டு சிறிய எஸ்.யு.வி.-க்கள் முற்றிலும் புதிய EMA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட இருக்கிறது.

சிறிய கார்கள் ரேன்ஜ் ரோவர் இவோக் மற்றும் வெலார் EV மாடல்களாக இருக்கும் என்று தெரிகிறது.

Tags

Read MoreRead Less
Next Story