ஸ்கோடா நிறுவனம் கார்- ரூ. 2 லட்சம் விலை குறைப்பு !
கோடியக் எஸ்.யு.வி
ஸ்கோடா நிறுவனம் தனது கோடியக் எஸ்.யு.வி.-இன் வேரியன்ட்களை மாற்றியுள்ளது. முன்னதாக மூன்று வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த கோடியக் தற்போது டாப் எண்ட் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மேலும், இதன் அம்சங்களும் மாற்றப்பட்டுள்ளன.
ஸ்கோடா கோடியக் L&K வேரியண்ட் ரூ. 41 லட்சத்து 99 ஆயிரம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இதன் விலை தற்போது ரூ. 2 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம் என மாற்றப்பட்டு இருக்கிறது. விலை, வேரியண்ட் மாற்றப்பட்டது தவிர காரில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
கோடியக் மாடலில் 190 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜினுடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-வீல் டிரைவ் போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.
இந்திய சந்தையில் ஸ்கோடா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் எஸ்.யு.வி. மாடலாக கோடியக் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடல் டொயோட்டா பார்ச்சூனர், ஜீப் மெரிடியன், ஹூண்டாய் டக்சன் மற்றும் எம்.ஜி. குளோஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
ரூ. 2 லட்சம் குறைக்கப்பட்டு ரூ. 39 லட்சத்து 99 ஆயிரம் என மாற்றப்பட்டு உள்ள நிலையில் கார் வாங்குவோர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு ஸ்கோடா நிறுவனம் அறிவித்துள்ளது.