தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் 'Stellantis' திட்டம்!

தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் கார் தயாரிக்கும் Stellantis திட்டம்!

ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம்

உலகின் 3-வது பெரிய மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஸ்டெல்லான்டிஸ் நிறுவனம் ஏற்கனவே சிட்ரோன் பிராண்டின் கீழ் திருவள்ளூரில் எலக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்து வருகிறது.

சீனாவின் 'Leapmotor' நிறுவனத்துடன் இணைந்து இத்தாலியின் 'Stellantis' நிறுவனம் இந்தாண்டு இறுதிக்குள் மலிவு விலையிலான மின்சார கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு திருவள்ளூரில் உள்ள ஸ்டெல்லான்டிஸ் ஆலையில் மலிவு விலையில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்ய பரிசீலித்து வருகிறது.

இந்தியாவில் சீன ஆட்டோமொபைல் நிறுவனங்கள் முதலீடு செய்ய முடியாமல் தவித்து வரும் வேளையில் சீனாவின் Leapmotor மாற்று யோசனையில் ஸ்டெல்லான்டிஸ் உடன் கூட்டணி சேர்ந்து நுழைந்துள்ளது. இந்த கூட்டணி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு மலிவு விலை எலக்ட்ரிக் கார்களை தயாரிக்க உள்ளது.

Tags

Next Story