கியா நிறுவனம் களமிறக்கும் சர்வதேச வெளியீட்டுக்கு ரெடியாகும் EV3...

கியா நிறுவனம் களமிறக்கும் சர்வதேச வெளியீட்டுக்கு ரெடியாகும் EV3...

EV3

கியா நிறுவனத்தின் இன்று லெவல் எலக்ட்ரிக் கார் மாடல் மே 23ஆம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது.

கியா EV3 பெயரில் அறிமுகமாக இருக்கும் புதிய எலக்ட்ரிக் கார் டீசர் வெளியாகி உள்ளது. முன்னதாக இந்த கார் கான்செப்ட் வடிவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது இதன் புரொடக்ஷன் வெர்ஷன் எப்படி காட்சி அளிக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்த எலக்ட்ரிக் கார் சதுரங்க வடிவிலான தோற்றம் கொண்டிருக்கும் புகைப்படங்களின் படி இந்த கார் அதன் கான்செப்ட் வெர்ஷனை போன்றே காட்சியளிக்கும் மாடல் ஹோண்டாய் மோட்டார் குழுமத்தின் பிஸ்போக் எலெக்ட்ரிக் E-GMP பிளாட்ஃபார்மில உருவாக்கப்படுகிறது.

இந்த இந்த பிளாட்ஃபார்மில் 400 வோல்ட் எலெக்ட்ரிக் ஆர்கிடெக்ச்சர் பயன்படுத்தப்படுகிறது இதனால் இந்த கார் அதிவேக சார்ஜிங் வசதியை பெறாது எனினும் இந்த காரின் விலை சற்று குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

கியா நிறுவனம் இந்திய சந்தையில் EV9 மூன்றடுக்கு இருக்கை கொண்ட எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடலை இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கிறது. எனினும், கியா EV3 மாடலின் இந்திய வெளியீடு தொடர்பாக இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.


Tags

Read MoreRead Less
Next Story