டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் தலைகுனிந்து மன்னிப்பு - என்ன நடந்தது ??
அகியோ டொயோட்டா
ஜப்பானை தலைமையாகக் கொண்ட டொயோட்டா நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட ஏழுவகை கார் மாடல்களுக்கு முறையான வகையில் பாதுகாப்பு பரிசோதனை செய்யப்படாமல் ஏமாற்று வேலை நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
Collison டெஸ்ட், ஏர்பேக் டெஸ்ட், சீட் டேமேஜ் டெஸ்ட், இன்ஜின் பவர் டெஸ்ட் ஆகியவை உரிய முறையில் செய்யப்படாமல் அவற்றுக்கு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து கொரோலா பீல்டர், கொரோலா ஆக்சியோ, யாரிஸ் கிராஸ் ஆகிய 3 மாடல் கார்களின் உற்பத்தியை டொயோட்டா நிறுத்திக்கொண்டது.
இந்த விவகாரம் ஆட்டோமொபைல் துறையில் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் டொயோட்டா நிறுவனத்தின் தலைவர் அகியோ டொயோட்டா தலை குனிந்து மன்னிப்பு கேட்டுள்ளார். ஜூன் 3 செய்தியாளர்களை சந்தித்து இந்த முறை கேடுகளுக்கு மிகவும் வருந்துவதாகவும், "I AM TRULY SORRY"..என்றும் தலைகுனிந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.