நீர்மூழ்கிக் கப்பல் உருவான கதை !
நீர்மூழ்கிக் கப்பல்
டச்சுக்காரரான கார்னீலியஸ் டிரபெல் என்பவர் சாதாரணப் வான் ஒரு படகைத் தோலினால் மூடினார். அந்தப் படகை, தேம்ஸ் நதியில் நீர்மட்டத்திற்குக் கீழே 15 அடி ஆழத்தில், 1620- ஆம் ஆண்டு இயக்கிக் காட்டினார். இவரே நீர்மூழ்கிக் கப்பல் உருவாகக் காரணமாய் இருந்தவர்.
போரில் வேண்டும்போது நீர்மட்டத்திற்கு மேலே வரவும், தேவையில்லாதபோது நீர்மட்டத்திற்குக் கீழ் மறைந்து இயங்கும்படியும் நீர்மூழ்கிக் கப்பல் அமைக்கப் பட்டிருக்கும்.
1776-ஆம் ஆண்டு டேவிட் புஷ்னெல் என்பவர் ஒரு நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்கினார். கப்பலில் உள்ள 'டாங்கி'யில் நீரை நிரப்பி கப்பலை மூழ்கச் செய்தார். ஒருவர் மட்டும் இருந்து இக்கப்பலை இயக்கலாம்.
இக்கப்பலே முதன்முதலாகக் கடற்போரில் பங்கு கொண்ட முதல் நீர்மூழ்கிக் கப்பலாகும். இக்கப்பல் அமெரிக்காவில் நடைபெற்ற சுதந்திரப்போராட்டத்தில் பிரிட்டிஷ் யுத்தக் கப்பலை நியுயார்க் துறைமுகத்தில் தாக்கியது. அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் ஃபுல்டன் என்பவர், 'நாட்டிலஸ்' என்னும் கப்பலையும், 1900-இல் 'ஹாலந்து' என்னும் கப்பலையும் உருவாக்கினார். இந்த இரு நீர்மூழ்கிக் கப்பல்களும் தாமிரத்தால் உருவானவை. அமெரிக்கக் கப்பற் படையில் இவ்விரு கப்பல்களும் பயன்படுத்தப்பட்டன. 1906-ல் டீசல் இயந்திரங்கள் பொருத்தப்பட்டன. முதல் உலகப் போரில் ஜெர்மனியரும். இரண்டாம் உலகப் போரில் எல்லா நாடுகளும் நீர்மூழ்கிக் கப்பலை அதிக அளவில் பயன்படுத்தின. இன்று விஞ்ஞானப் புரட்சியில் அதிநுட்பத் திறன் படைத்த நீர்மூழ்கிக் கப்பல்கள் உருவாக்கப்படுகின்றன.