ஜாலியா ரைடு போக டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் !

ஜாலியா ரைடு போக டாப் 5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் !

 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

iVOOMi எனர்ஜியின் Jeet X : தனிநபர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஏற்ற ஒரு எலெக்ட்ரிக் பைக்காக iVOOMi எனர்ஜியின் Jeet X திகழ்கிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 70கி.மீ ஆகும். 2.1 KW மற்றும் 2.5 KW பேட்டரி வேரியண்டில் வரும் இந்த ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 140கி.மீ வரை செல்ல முடியும். மேலும் இதில் 22 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளதால் நகர்ப்புற பயணத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த ஸ்கூட்டரில் உள்ள இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால் இதில் மட்டும் தான் கழட்டி மாற்றும் வகையில் பேட்டரி உள்ளது.


ஓலா S1 Pro : அதிக திறனுள்ள ரிமூவபுள் 3.97 kWh லித்தியம் அயன் பேட்டரியில் வந்துள்ள ஓலா S1 Pro, ஒருமுறை சார்ஜ் செய்தால் 181கி.மீ வரை செல்லக்கூடியது. நவீன ரைடர்களுக்கு ஏற்ற சிறந்த பெர்ஃபார்மன்ஸை கொண்டுள்ள இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 115கி.மீ ஆகும்.



ஏதர் 450X : ஸ்கூட்டரின் எடைக்கும் பெர்ஃபார்மன்ஸிற்கும் கச்சிதமாக இருக்கும் 2.9 kWh லித்தியம் அயன் பேட்டரியை கொண்டுள்ள ஏதர் எனர்ஜியின் 450X எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 160கி.மீ வரை செல்லும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 80கி.மீ ஆகும்.


பஜாஜ் சீதக் Urbane Techpac : 2.9 kWh லித்தியம் அயன் பேட்டரியை கொண்டுள்ள பஜாஜ் சீதக் Urbane Techpac எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 113 முதல் 127கி.மீ வரை செல்லும். இதன் அதிகப்பட்ச வேகம் மணிக்கு 63கி.மீ ஆகும்.


டிவிஎஸ் iQube S : 3.04 kWh திறனுள்ள லித்தியம் அயன் பேட்டரியுடன் வந்துள்ள டிவிஎஸ் iQube S எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஈகோ மோடில் 100கி.மீ வரை செல்ல முடியும். இதன் பேட்டரியை 4 மணி நேரம் 30 நிமிடங்களில் முழுதாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். இந்த ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 78கி.மீ ஆகும்.



Tags

Next Story