டி.வி.எஸ். நிறுவனத்தின் அப்டேட்..... என்னது புது எடிஷனா !

டி.வி.எஸ். நிறுவனத்தின் அப்டேட்..... என்னது புது எடிஷனா !

'ரோனின்' பைக்

பண்டிகை காலத்தை முன்னிட்டு, டி.வி.எஸ்., நிறுவனம், அதன்'ரோனின்' பைக்கின் ஸ்பெஷல் எடிஷனை வெளியிட்டுள்ளது.இதற்கு முன்பு வெளியான ரோனின் மாடலின் டாப் வேரியன்டை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பைக், 'நிம்பஸ் கிரே' எனும் மூன்று நிறங்களில் வருகிறது என அறிவித்துள்ளனர்.

இதில் பிரதானமாக சாம்பல் நிறமும், ஆங்காங்கே சிவப்பு மற்றும் வெள்ளை நிற கோடுகளும் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பைக்கின் கீழ்புறம் முழுதும் கருப்பு நிறத்தில் வருகிறது.

யு.எஸ்.பி., சார்ஜர், வைசர், இ.எப்.ஐ., கவர் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. சக்கரங்களின் விளிம்புகள், டி.வி.எஸ்., ரோனின் என்ற பிராண்டிங்குடன் வருவது கவர்ச்சிகரமாக இருக்கிறது.

இத்துடன் 'ஆர்' எனும் லோகோ பேட்டர்னும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த தோற்றம் மற்றும் வசதி மாற்றங்களை தவிர்த்து, இன்ஜின், கியர்பாக்ஸ் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் அனைத்தும் முந்தைய மாடலை போலவே உள்ளது.

இந்த பைக், ராயல் என்பீல்டு ஹன்டர் 350, ஹோண்டா சி.பி., 350 ஆர்.எஸ்., ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விலை: ரூ.1.72 லட்சம் என்று தகவலை டி.வி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story