டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்த ஐகியூப் STவேரியண்டை !!!
ஐகியூப் ST
டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஐகியூப் st வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய டிவிஎஸ் ஐகியூப் st மாடல் -ன் விலை ரூபாய் 1 லட்சத்து 85 ஆயிரம் என எக்ஸ்-ஷோரூம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய வேரியண்ட் இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் மிகப்பெரிய பேட்டரி கொண்டுள்ளது. புதிய ஐகியூப் வேரியண்ட் இதே ஸ்கூட்டரின் 3.4 கிலோ வாட் ஹவர் பேட்டரி கொண்ட வெர்ஷனை விட ரூபாய் 40 ஆயிரம் வரை விலை அதிகமாகும்.
கடந்து 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் st மாடல் தற்போது தான் விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் காண முன்பதிவு ஏற்கனவே நடைபெற்று வந்தது.
அந்த வகையில் இந்த ஸ்கூட்டர் முதலில் முன்பதிவு செய்தோருக்கு முன்னுரிமை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்கூட்டரை கடந்து 2022 ஜூலை 15ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி போனஸ் சலுகையின் கீழ் ரூபாய் பத்தாயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
புதிய ஐகியூப் stவேரியண்ட் 3.4 கிலோ வாட் ஹவர் மற்றும் 5.1 கிலோ வாட் ஹவர் என இருவித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 5.1 கிலோ வாட் ஹவர் வேரியன்ட் முழு சார்ஜர் செய்தால் 150 கிலோமீட்டர் வரையிலான ரேஞ்ச் வழங்கும். புதிய ஐகியூப் இரண்டு வருஷங்களுடன் 950 வாட்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது.