வோக்ஸ்வேகன் டைகுன் - 2 புது வெர்ஷன்கள் அறிமுகமா !!!
வோக்ஸ்வேகன் டைகுன்
வோக்ஸ்வேகன் நிறுவனம் டைகுன் GT லைன் மற்றும் டைகுன் GT பிளஸ் ஸ்போர்ட் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இவற்றின் விலை முறையே ரூ. 14 லட்சத்து 08 ஆயிரம் மற்றும் ரூ. 18 லட்சத்து 53 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புது வேரியண்ட்கள் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எஸ்.யு.வி.யின் பிளாக் ஸ்போர்ட் தீம் கொண்ட ஸ்பெஷல் வெர்ஷன் ஆகும்.
இவை புதிதாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஸ்போர்ட் லைன் பிரிவில் இடம்பெற்றுள்ளன.
GT பிளஸ் மாடலில் கார்பன் ஸ்டீல் கிரே நிற ரூஃப், முன்புற கிரில், ஃபெண்டர் மற்றும் டெயில்கேட் பகுதிகளில் ரெட் நிறத்தில் "GT" பிராண்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது.
GT லைன் வேரியண்டில் "GT" பிராண்டிங் பிளாக் நிறத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரண்டு வேரியண்ட்களிலும் 17 இன்ச் கசினோ பிளாக் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. GT பிளஸ் வேரியண்டில் முன்புறம் ரெட் நிற கேலிப்பர்கள் வழங்கப்படுகின்றன.
உள்புறம் பிளாக் நிற இருக்கை மேற்கவர்கள் வழங்கப்படுகின்றன.
GT பிளஸ் மாடலில் சிவப்பு நிற ஸ்டிட்ச் (தையல்) செய்யப்பட்டுள்ளது. GT லைன் மாடலில் கிரே நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் GT பிளஸ் மாடலில் ரெட் நிற GT லோகோ, அலுமினியம் பெடல்கள், அறிமுக சலுகையாக நான்கு ஆண்டுகளுக்கு சர்வீஸ் வேல்யூ பேக்கேஜ் வழங்கப்படுகிறது.
வோக்ஸ்வேகன் டைகுன் ஸ்போர்ட் GT லைன் மாடலில் 1.0 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 114 ஹெச்.பி.பவர், 178 நியூட்டன் மீட்டர் டார்
இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. புதிய டைகுன் GT பிளஸ் மாடலில் சற்றே சக்திவாய்ந்த 1.5 லிட்டர் TSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்த என்ஜின் 148 ஹெச்.பி. பவர், 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இரு என்ஜின்களுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.