யமஹா பைக்கின் விலை இவ்ளோதானா!

யமஹா பைக்கின் விலை இவ்ளோதானா!

யமஹா பைக்

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று யமஹா எம்டி15 (Yamaha MT15). இந்த பைக்கின் ஜனவரி மாதத்திற்கான விற்பனை பற்றி வெளியாகியுள்ளது. இதன்படி யமஹா நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 15,124 எம்டி15 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 8,738 ஆக மட்டுமே இருந்தது. இது 73.08 சதவீத வளர்ச்சி ஆகும். இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட பைக் என்ற பெருமையையும் யமஹா பெற்றுள்ளது. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் யமஹா எம்டி15 பைக்கின் ஆரம்ப விலை 1.69 லட்ச ரூபாயாக உள்ளது. டார்க் மேட் ப்ளூ, மெட்டாலிக் பிளாக், சியான் ஸ்ட்ரோம் டிஎல்எக்ஸ், ஐஸ் ப்ளூயோ-வெர்மில்லியன் டிஎல்எக்ஸ்,

ரேசிங் ப்ளூ டிஎல்எக்ஸ் மற்றும் மெட்டாலிக் பிளாக் டிஎல்எக்ஸ் ஆகிய கலர் ஆப்ஷன்களில் யமஹா எம்டி15 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோஜிபி எடிசனும் விற்பனையில் உள்ளது. இந்த பைக்கில் அஸிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த பைக்கில் 10 லிட்டர் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story