துபாயில் இந்திய வர்த்தக அமைப்பின் சார்பில் பாராட்டு விழா

துபாயில் இந்திய வர்த்தக அமைப்பின் சார்பில் பாராட்டு விழா

பாராட்டு விழா

துபாயில் இந்திய வர்த்தக அமைப்பின் சார்பில் இந்திய துணை தூதர் டாக்டர் அமன்புரி பணி நிறைவடைந்து செல்வதையொட்டி பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் இந்தியாவுக்கான அமீரகத்தின் முன்னாள் தூதர் டாக்டர் அகமது அப்துல் ரஹ்மான் அல்பன்னா, அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய டாக்டர் பால் பிரபாகர், இந்திய துணை தூதரின் பணிகள் மிகவும் சிறப்புக்குரியது. புதிய பொறுப்பில் இன்னும் சிறப்பான பணிகளை மேற்கொள்ள வாழ்த்து தெரிவித்தார். அதனை தொடர்ந்து அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags

Next Story