இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவருக்கு பாராட்டு

இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவருக்கு பாராட்டு

பாராட்டு

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கோயமுத்தூர் நகரை சேர்ந்த இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் மற்றும் ஆர்.வி.எஸ். கல்வி குழுமங்களின் மேனேஜிங் டிரஸ்டியுமான டாக்டர் செந்தில் கணேஷ் வருகை புரிந்தார். அவருடன் அமீரக தொழில் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் சந்தித்து பேசினார். மேலும் அவரது சேவைகளைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

அப்போது கோவை இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. அப்போது மெகாபைட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ராம் சங்கர் உடன் இருந்தார்.

Tags

Read MoreRead Less
Next Story